தேசிய செய்திகள்

டெல்லியில் பாரா கிளைடர், ட்ரோன், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை

டெல்லி வான்வெளி பகுதிகளில் பாரா கிளைடர், ட்ரோன், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் இன்று தொடங்கி பிப்ரவரி 15 ஆம் தேதி வரை 27 நாட்கள் வான்வெளியில் ட்ரோன்கள், பாரா கிளைடர்கள், குவாட்காப்டர்கள், பாரா ஜம்பிங், மைக்ரோலைட் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை ஒட்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார். மேலும் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது