தேசிய செய்திகள்

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சிகரெட், பீடி போன்றவற்றுக்கு மாற்றாக உலக அளவில் இ-சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் அதிக ஆபத்தில்லாதவை எனக் கூறப்பட்டாலும், பல்வேறு ஆய்வுகளின் முடிவில், புகையிலை சிகரெட்டுக்கு நிகரான தீங்குகள் இந்த இ-சிகரெட்டாலும் ஏற்படும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இ-சிகரெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில், கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவையில் இன்று இ- சிகரெட்டிற்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இந்த மசோதா இனி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் கையொப்பம் பெற்ற பின் சட்டமாகும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து