தேசிய செய்திகள்

17-வது மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 6-ல் தொடக்கம் என தகவல்

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

புதுடெல்லி,

வரும் 30 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து 31 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில், நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

ஜூன் 6 ஆம் தேதி 17வது மக்களவை கூட்டத் தொடர் தொடங்கலாம் என கூறப்படுகிறது. அன்றைய தினம் தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு, புதிய எம்பிக்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார். மக்களவை சபாநாயகர் ஜூன் 10 ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...