தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனைகளுக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார் மனோகர் பாரிக்கர்

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மருத்துவ பரிசோதனைகளுக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளார்.

பானஜி,

கணைய பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் ஏறக்குறைய மூன்று மாதம் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்ட கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், கடந்த ஜூன் மாதம் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பியதும், உடனடியாக கோவா சென்று தனது பணிகளை மனோகர் பாரிக்கர் துவங்கினார். அவ்வப்போது, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தார்.

இந்த மாதம் மீண்டும் அமெரிக்கா சென்ற மனோகர் பாரிக்கர், இந்தியா திரும்பிய மறுநாளே, (ஆக.23) மும்பை லீலாவதி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று கோவா திரும்ப உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் அமெரிக்க செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், மனோகர் பாரிக்கரின் உடல் நிலை குறித்த எந்த தகவலையும் வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இன்று இரவு, மும்பையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்ல இருப்பதாக முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...