தேசிய செய்திகள்

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு இன்று 62-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு இன்று தனது 62-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பானஜி,

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று தனது 62 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மனோகர் பாரிக்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிறந்த தினமான இன்று கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், மேனகா காந்தி, பியூஸ் கோயல் உள்ளிட்டோரும் மனோகர் பாரிக்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்னர்.

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். கோவாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதும், கோவா முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றுக்கொண்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு