தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாக்கள் நிறைவேற்றம்

தேசிய ஊக்கமருந்து தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மக்களவையில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகமாக கருதப்படும் பல்கலைக்கழகத்தை கதிசக்தி விஸ்வவித்யாலயா என்ற தன்னாட்சி பெற்ற மத்திய பல்கலைக்கழகமாக மாற்றும் மசோதா (மத்திய பல்கலைக்கழக திருத்த மசோதா) தாக்கல் செய்யப்பட்டது. கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தாக்கல் செய்த இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதைப்போல தேசிய ஊக்கமருந்து தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. விளையாட்டு வீரர்கள், அவர்களின் உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஊக்கமருந்து பயன்படுத்துவதை தடை செய்வதுடன், ஊக்கமருந்து தடுப்பு பிரிவை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அங்கீகரிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

இந்த மசோதா மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மக்களவையில் கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்காக இரு அவைகளின் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்த தரவு (டேட்டா) பாதுகாப்பு மசோதா நேற்று திரும்ப பெறப்பட்டது. இந்த மசோதா, தனிநபர்களின் தனிப்பட்ட தரவு தொடர்பான டிஜிட்டல் தனியுரிமையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது ஆகும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்