தேசிய செய்திகள்

இந்தியாவில் மே 17ம் தேதி வரை விமான சேவைகளுக்கு தடை நீட்டிப்பு

இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு மே 17ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது மே 17ம் தேதி வரை அதனை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய விமான பேக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு உத்தரவை மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பதை அடுத்து, உள்நாட்டு பயணிகள் விமான சேவை மே 17ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி பிறப்பித்த உத்தரவுகளை அனைத்தும் மே 17ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே, அதுவரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இந்த உத்தரவு சர்வதேச சரக்கு விமானச் சேவைக்கும், சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமான சேவைக்கும் பொருந்தாது. அடுத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவை தொடங்கும் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு