தேசிய செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ. 39.37 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; பயணி கைது

தாய்லாந்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் வந்தது

பெங்களூரு,

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து நேற்று முன் தினம் கர்நாடகாவின் பெங்களூருவுக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, விமானத்தில் வந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் 1.12 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 39.37 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.