விசாகப்பட்டினம்,
இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வரும் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் நாட்டில் நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.
இதனை தொடர்ந்து, ஆந்திர பிரதேசத்தில் இன்று காலை முதல் விமான போக்குவரத்து செயல்பட தொடங்கியது. விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட விமான நிலையங்களில் காலை முதல் பயணிகள் வர தொடங்கினர். முன்பதிவு செய்திருந்த பயணிகள் தங்களது உடைமைகளுடன் விமான நிலையத்திற்கு வந்து வரிசையில் நின்றனர்.
அவர்களது உடைமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பயணிகளுக்கு உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முக கவசம் அணிவது அவசியம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.