புதுடெல்லி,
சுதந்திர தினத்தையொட்டி டெல்லி தலைமைச்செயலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தேசியக் கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவாக டெல்லி அரசுப் பள்ளிகளில் வருகிற செப்டம்பர் 27-ந் தேதி முதல் தேசபக்தி பாடத்திட்டம் கொண்டுவரப்படும். ஒவ்வொரு குழந்தையிடமும் நாடு குறித்த பெருமித உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நாட்டுக்காக தியாகம் செய்ய தயார்ப்படுத்தும் வகையிலும் இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த டாக்டர்கள், துணைமருத்துவப் பணியாளர்களுக்கு நான் மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.