புதுடெல்லி,
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ந்தேதி நாடு முழுவதும் விஜய் திவாஸ் என்ற பெயரில் வெற்றி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது
இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர்ஜவான் ஜோதியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி டுவிட்
விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், 1971 ஆம் ஆண்டு போரின் போது மிகச்சிறந்த உத்வேகத்துடன் போரிட்ட வீரர்களின் துணிச்சலை நாம் போற்றுகிறோம். வீரர்களின் அசாத்திய துணிச்சலும் தேசபக்தியும் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தது. வீரர்களின் சேவை எப்போதும் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.