தேசிய செய்திகள்

மாநிலங்களவை கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்து கொள்வார் - மனைவி தகவல்

மாநிலங்களவை கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்து கொள்வார் என அவரது மனைவி தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கப்பிரிவு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை அவரது மனைவியும், மூத்த வக்கீலுமான நளினி சிதம்பரம் வரவேற்று உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், தனது கணவருக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், உடல்நலனில் கவனம் செலுத்திவிட்டு நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 13-ந் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

இதேபோல் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதியின் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும், தனது தந்தைக்கு ஜாமீன் கிடைத்ததை வரவேற்று இருக்கிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்