தேசிய செய்திகள்

பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரம்; விசாரணைக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆதரவு

பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்த விசாரணைக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆதரவு தெரிவிப்பதாக கூறி உள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பல்வேறு அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகிறார்கள். பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் சிலர் வழக்கு தொடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் பீகாரின் முதல்-மந்திரி நிதிஷ்குமார், பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு குறித்த விசாரணைக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி உள்ளார். இந்த சர்ச்சை பத்திரிகைகளில் படித்த செய்திகளில் இருந்து மட்டுமே எனக்குத் தெரியும். நவீன தொழில்நுட்பத்தை கெட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. யாருடைய தொலைபேசி உரையாடல்களை இடைமறிக்க முயற்சிகள் நடந்திருந்தால் இந்த விஷயத்தை தகுந்த நடவடிக்கைக்காக விசாரிப்பது நல்லது" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ளபோதிலும் அவர் பெகாசஸ் விசாரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி அவர் பேசும்போது, எங்கள் கூட்டணி நீண்டகாலமாக சுமூகமாக உள்ளது. இந்த விவகாரத்தில் அவர் (பிரதமர்) கட்சியின் மூத்த தலைவர்களுடன் விவாதிக்கலாம் என்றார். எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருப்பது பற்றி நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, நாடாளுமன்றத்தின் மேல்மட்டத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி நான் கருத்து கூற முடியாது என்றார்.

அதே நேரத்தில், யாரிடமாவது இதுபற்றி உறுதியான தகவல்கள் ஏதும் இருப்பின் அதை அரசாங்கத்திடம் அவர்கள் தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு விரைவில் உறுதியான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை