தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் நிலுவையில் இருந்த முத்தலாக், குடியுரிமை மசோதாக்கள் காலாவதி

மாநிலங்களவையில் நிலுவையில் இருந்த முத்தலாக், குடியுரிமை மசோதாக்கள் காலாவதி ஆகி உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்தவர்கள், இந்தியாவில் 7 ஆண்டுகள் குடியிருந்தால், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகைசெய்யும் குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதுபோல், முத்தலாக் தடை மசோதாவும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இம்மசோதாக்களின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநிலங்களவையில் இம்மசோதாக்கள் நிறைவேறாமல் நிலுவையில் இருந்தன.

இந்நிலையில், 16-வது மக்களவையின் பதவிக்காலம் முடிவடைவதால், மக்களவையை கலைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். மக்களவையில் நிறைவேறிய மசோதா, மாநிலங்களவையில் நிலுவையில் இருந்தால், மக்களவை கலைக்கப்பட்டவுடன், அம்மசோதா காலாவதி ஆகிவிடும். அந்த அடிப்படையில், குடியுரிமை, முத்தலாக் தடை மசோதாக்கள் காலாவதி ஆகிவிட்டன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்