புதுடெல்லி,
தமிழகம், மேற்கு வங்காளம், அசாம், கேரளம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளன.
இந்தநிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்த எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.100ஐ |நோக்கிச் சரிந்து வருவதும், தொழில்துறைக்கான டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பதும் வரவிருக்கும் விலைவாசி உயர்வின் அறிகுறியே.
இதன் எதிரொலியால், உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்க உள்ளதோடு, சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும்.
5 மாநிலத் தேர்தல்கள் முடிந்ததும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை மத்திய அரசு உயர்த்திவிடும்.
எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க மோடி அரசிடம் எந்தவொரு திட்டமிடலும் இல்லை. ரூபாய் மதிப்பு சரிவு, டீசல் விலை உயர்வால் சாமானியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அதில் பதிவிட்டுள்ளார்.