புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று காலை மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக அறிவித்தார். இதற்கான நடவடிக்கைகளை இம்மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தைததையடுத்து டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
சீக்கிய மதத்தலைவர்களின் ஒருவரான குருநானக்கின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குருநானக் ஜெயந்தியான இன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை கொண்டாடு வகையில் விவசாயிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.