தேசிய செய்திகள்

காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது - ராணுவ தளபதி தகவல்

காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதாக ராணுவ தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ராம்கர்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதில் ஜம்மு பகுதியில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட நிலையில், காஷ்மீரிலும் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்புவதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த அவர் இது தொடர்பாக மேலும் கூறும்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் எந்த இடத்திலும் ஊரடங்கு போன்ற நிலைமை இல்லை. அங்கு மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை