தேசிய செய்திகள்

அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடையை ஏற்றுக்கொள்ள வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா

அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் என ஹிஜாப் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்தார்.

புதுடெல்லி

கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகியுள்ளது. ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில தொலைக்காட்சி அளித்த பிரத்யேக பேட்டியில் அமித்ஷா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமித்ஷா கூறுகையில், அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது, நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அது என்ன தீர்ப்பை வழங்குகிறதோ அதனை அனைத்து மதத்தினரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்