கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உ.பி. தேர்தல்: வெற்று வாக்குறுதிகளால் மக்களை திசைதிருப்ப முயற்சி - மாயாவதி குற்றச்சாட்டு

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்று வாக்குறுதிகளையும், கவர்ச்சியான வாக்குறுதிகளையும் அளித்து மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றன. விவசாய விரோத பா.ஜனதா அரசை தோற்கடிக்க பகுஜன் சமாஜ் கட்சியால்தான் முடியும். வேதனைப்படும் மக்களுக்கு அதுவே மகிழ்ச்சியான மாற்றமாக இருக்கும்.

வன்முறையற்ற, நம்பகமான அரசை பகுஜன் சமாஜ் கட்சியால்தான் அளிக்க முடியும். பா.ஜனதாவுக்கு தாங்கள் தோற்கப்போவது நன்றாக தெரிந்து விட்டது. இந்த சூழ்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். உத்தரபிரதேச மக்கள் பாஜகவுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை