சென்னை,
முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் ரம்ஜான் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டனர்.
புகழ்பெற்ற டெல்லி ஜூம்மா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அதேபோல்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் ரடபோராவில் உள்ள மசூதியிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.