தேசிய செய்திகள்

இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

போதுமான கையிருப்பு இருப்பதால், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை வணிக நோக்கத்துடன் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. புனேவில் உள்ள சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. சீரம் நிறுவனம் தன்னிடம் 24 கோடியே 89 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும், நாள்தோறும் கையிருப்பு அதிகரித்து வருவதாகவும் சமீபத்தில் மத்திய அரசிடம் தெரிவித்தது.

அதுபோல், கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பும் அதிகமாக உள்ளது. எனவே, கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை வணிக நோக்கத்துடன் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதவிர, ஐ.நா. ஆதரவுடன் நடக்கும் கோவாக்ஸ் என்ற சர்வதேச தடுப்பூசி திட்டத்துக்கும் இந்திய தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?