புதுடெல்லி,
நாடு முழுவதும் 1.09 கோடி மரங்கள் வெட்டுவதற்கு கடந்த 5 ஆண்டுகளில் அனுமதி அளிக்கப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரி பாபுல் சுப்ரியோ நேற்று முன்தினம் மக்களவையில் தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில், மரங்கள்தான் வாழ்க்கை, மரங்கள்தான் ஆக்சிஜன், மரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உள்ளிழுக்கின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன. ஆனால் மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் 1.09 கோடி மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்து இருக்கிறது. நமது எதிர்காலத்தை பா.ஜனதா அழிக்கிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.