பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் 2 வகையில் உள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக அரசின் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவத;-
தட்சிண கன்னடா, ஹாசன், தாவணகெரே, சாம்ராஜ்நகர் ஆகிய 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. அதாவது அந்த மாவட்டங்களில் மளிகை கடைகள் மட்டுமின்றி அனைத்து வகையான வணிக கடைகளையும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் குளிர்சாதன வசதி கொண்ட கடைகளை திறக்க அனுமதி இல்லை. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.