கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. இந்த சூழலில் உத்தர பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் வினாத்தாள் வெளியானதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற (செப்டம்பர் 12ஆம் தேதி) நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நீட் வினாத்தாளை பயிற்சி மையங்களில் முன்கூட்டியே வழங்கி முறைகேடு மற்றும் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது. இதனால் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது. நீட் தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சோதனை, ஜாமர் உள்ளிட்ட கருவிகள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை