தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு வணிக அங்கீகாரம் கேட்டு மனு: மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் அனுப்பியது

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு வணிக அங்கீகாரம் கேட்டு மத்திய அரசிடம் சீரம் நிறுவனம் மனு அனுப்பியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. நாட்டில் அவசர பயன்பாட்டுக்கு மட்டுமே இதுவரை அந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 100 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் வினியோகித்து விட்டது. இதை சுட்டிக்காட்டி, கோவிஷீல்டுக்கு வழக்கமான வணிக அங்கீகாரம் வழங்குமாறு மத்திய அரசின் மருந்து கட்டுப்பாடு தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு சீரம் நிறுவனம் மனு அனுப்பி வைத்துள்ளது.

இந்த அங்கீகாரம் கிடைத்தால், உலக அளவில் பைசர் தடுப்பூசிக்கு பிறகு இத்தகைய அங்கீகாரம் பெறும் 2-வது தடுப்பூசியாக கோவிஷீல்டு இருக்கும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து