கோப்புப் படம் 
தேசிய செய்திகள்

தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறக்க கோரி மனு - அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறக்க கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள தாஜ்மஹால் கட்டப்படுவதற்காக, அங்கிருந்த தேஜாலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாகப் புகார் உள்ளது. இக்கோயிலின் சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலின் வரலாற்றை அறிய உண்மை கண்டறியும் குழுவை உருவாக்க வேண்டும் என்றும் தாஜ்மஹாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளைத் திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அயோத்தியின் பாஜக செய்தித் தொடர்பாளரான டாக்டர். ரஜ்னீஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த நிலையில் தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறக்க கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை