தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைப்பு, டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையில், எந்த மாற்றமும் இல்லை.#Petrol

புதுடெல்லி,

இந்தியாவில், சர்வதேச சந்தையின் கச்சா எண்ணை விலை நிலவரம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.

இதனால், பெட்ரோல்,டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக விலை ஏற்றம் காணாமல், விலை குறைப்பு அல்லது அதே விலை என பெட்ரோல், டீசல் விலை நீடித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று (ஜூன் 22) பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.78.89 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, ஒரு லிட்டர் ரூ.71.44 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.