தேசிய செய்திகள்

கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் பெட்ரோல், டீசல், மதுபானம் விலை உயரும்

கேரள சட்டசபை கூட்டத்தில் நேற்று 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபை கூட்டத்தில் நேற்று 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல்-மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் நிதி மந்திரி கே.என். பாலகோபால் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ரூ.500 முதல் ரூ.999 வரையிலான இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மது பானங்களின் விலை பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 அதிகரிக்கப்படும். ரூ.1,000-த்திற்கும் கூடுதலான மது பாட்டிலுக்கு ரூ.40 உயர்த்தப்படும். இதன்மூலம் ரூ.400 கோடி வருவாய் கிடைக்கும். பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.2 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.750 கோடி கூடுதலாக கிடைக்கும். புதிதாக வாங்கும் ரூ.2 லட்சம் வரை உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு வரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பால் பெட்ரோல், டீசல், மதுபானம், வாகனங்களின் விலை உயரும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து