தேசிய செய்திகள்

6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகம்: வாகன ஓட்டிகள் கவலை

6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். #Petrolprice

தினத்தந்தி

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலையை தினசரி அறிவிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், விலை உயரும்போதோ அல்லது குறையும்போதோ அதுகுறித்த தகவல் பொதுமக்களுக்கு பரவலாகத் தெரிவதில்லை. இதனால், வாகனங்களுக்கு குறிப்பாக, இருசக்கர வாகனங்களுக்கு லிட்டர் கணக்கில் பெட்ரோல் நிரப்புவதற்குப் பதிலாக, 100, 200 என ரூபாய் கணக்குக்கு பட்ஜெட் அளவிலேயே பெட்ரோல் நிரப்பி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆறு தினங்களாக தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்ததாக கூறப்படுகிறது.

பிராண்டு இல்லாத பெட்ரோல் விலை நேற்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.32 ஆக விற்பனை ஆனது. இன்று 7 பைசா அதிகரித்து 72.39 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.75.07 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையை பொறுத்தவரை, டெல்லியில் ஒரு லிட்டர் நேற்று ரூ.62.89-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ. 62.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.66.31 ஆக இருந்தது. இன்று ரூ.66.39 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு