தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக ஏற்றத்திலேயே உள்ளது. #PetrolPrice #Diesel Price

தினத்தந்தி

புதுடெல்லி,

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கின்றது.

இதற்கிடையில் கடந்த மாதம்(ஏப்ரல்) 24-ந்தேதி முதல் கடந்த 13-ந்தேதி வரை 19 நாட்கள் விலையை ஏற்றவில்லை. இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல் காரணம் என்ற கூறப்பட்டது.இந்த நிலையில் தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 14-ந்தேதியில் இருந்து மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை உயர தொடங்கியது.

கடந்த 14-ந்தேதி முதல் பெட்ரோல் , டீசல் விலை தினமும் ஏற்றத்திலேயே உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். இன்று காலை (மே 19) நிலவரப்படி, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 0.32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.78.78 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 0.24 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.04 காசுகளாகவும் உள்ளன.

வரும் நாள்களில் மேலும் இவற்றின் விலை ரூ.4 முதல் ரூ.5 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு