தேசிய செய்திகள்

டெல்லியில் புதிய உச்சம் தொட்ட பெட்ரோல் விலை

நாடு முழுவதும் தொடர்ந்து 7வது நாளாக பெட்ரோல் விலை இன்று உயர்வடைந்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.110 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 0.35 காசுகள் உயர்ந்து ரூ.110.04 ஆக உயர்வடைந்து உள்ளது. இதேபோன்று டீசல் விலை 0.35 காசுகள் உயர்ந்து ரூ.98.42 ஆக உயர்வடைந்து உள்ளது

இதேபோன்று, மும்பை நகரில் பெட்ரோல் ரூ.115.85 மற்றும் டீசல் ரூ.106.62 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பெட்ரோல் ரூ.110.49 மற்றும் டீசல் ரூ.101.56 ஆகவும், சென்னையில் பெட்ரோல் 106.66 மற்றும் டீசல் ரூ.102.59 ஆகவும் விற்கப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்