தேசிய செய்திகள்

மத்திய அரசின் ஒதுக்கீட்டின்படி ரெம்டெசிவிரை தர மறுக்கும் மருந்து நிறுவனங்கள்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே குற்றச்சாட்டு

அத்தியாவசிய மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு மிக தாமதமாக அனுமதி வழங்குவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசின் ஒதுக்கீட்டின் படி மருந்து நிறுவனங்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரெம்டெசிவிர் மருந்துகளை தர மறுப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து மந்திரி ராஜேஷ் தோபே கூறுகையில், "ரெம்டெசிவிர் மருந்துகளை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் எவ்வளவு என்பதை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அந்த ஒதுக்கீட்டின் படி, ஒரே ஒரு மருந்து நிறுவனத்தை தவிர மற்ற நிறுவனங்கள் மருந்து சப்ளை செய்ய மறுக்கின்றன. இதனாலும் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா உதவிய ரெம்டெசிவிரில் மராட்டியத்திற்கு 52 ஆயிரம் மருந்துகள் கிடைத்துள்ளன" என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு