தேசிய செய்திகள்

தலைகீழாக விழுந்த புகைப்பட கலைஞருக்கு ஓடிச்சென்று உதவிய ராகுல் காந்தி, டுவிட்டரில் பாராட்டு

தலைகீழாக விழுந்த புகைப்பட கலைஞருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஓடிச்சென்று உதவும் வீடியோ வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளார். இன்று ஒடிசா சென்றுள்ளார். புவனேஷ்வர் விமான நிலையம் சென்ற அவரை புகைப்பட கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது புகைப்பட கலைஞர் ஒருவர் தனக்கு பின்னால் படிகள் இருப்பதை பார்க்காமல் பின்னால் சென்ற வண்ணமே புகைப்படம் எடுத்தார். அப்போது படியிலிருந்து எதிர்பாராத விதமாக தலைகீழாக விழுந்தார்.

படியில் இருந்து பின்னால் விழுந்த அவருடைய தலை தரையில் வேகமாக மோதியது. உடனடியாக ஓடிச்சென்ற ராகுல் காந்தி, புகைப்பட கலைஞரை கைகொடுத்து தூக்கி விட்டார். அவருடைய மனிதாபிமான பணியை பாராட்டி பலரும் டுவிட்டரில் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியினர் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது