தேசிய செய்திகள்

விமானத்திற்குள் நுழைந்த புறாவால் 30 நிமிடம் தாமதம்

விமானத்திற்குள் புறா நுழைந்ததால் விமானம் 30 நிமிடம் தாமதமாகி உள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது

தினத்தந்தி

புதுடெல்லி

அகமதாபாத் - ஜெய்ப்பூர் இடையிலான கோ-ஏர் பயணிகள் விமானம் சமீபத்தில் 30 நிமிடங்கள் தாமதமானது. காரணம் என்னவென்றால், புறப்பட தயாராக இருந்த விமானத்தில் புறா ஒன்று நுழைந்துள்ளது. அது விமானத்தினுள் பறந்துகொண்டிருந்த போது விமானத்தில் இருந்த பயணிகள் அதனை வீடியோ எடுத்தனர். சிலர் அதனை பிடிக்கவும் முயன்றனர் ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

ஒரு வழியாக புறா வெளியேறிய பின்னரே விமானம் புறப்பட்டது. ஆனால் விமானத்தினுள் புறா வந்தது எப்படி என்பதற்கு தற்போது வரை விடைகிடைக்கவில்லை.

டுவிட்டர் பயனரான ராகேஷ் பகத் இந்த சம்பவம் குறித்த வீடியோவைப் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு