தேசிய செய்திகள்

கேரளாவில் 6 வழிச்சாலை அமைக்க ரூ.3,465 கோடி: நிதின்கட்காரிக்கு பினராயி விஜயன் நன்றி..!

கேரளாவில் 6 வழிச்சாலை அமைக்க ரூ.3,465 கோடி ஒதுக்கிய மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு, பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கொடுங்கல்லூரில் இருந்து கொச்சியில் உள்ள எடப்பள்ளியை இணைக்கும் தமனி தேசிய நெடுஞ்சாலையை 6 வழியாக அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிதியில் இந்த 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் கேரளாவில் இந்த 6 வழிச்சாலையை அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.3,465 கோடியை ஒதுக்கியுள்ளது. இதையொட்டி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு