புதுடெல்லி,
நாடு முழுவதும் ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இந்த நிலையில், வரவிருக்கிற பண்டிகை காலங்களை முன்னிட்டு டெல்லியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என டெல்லி போலீசார் உளவு தகவல் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து டெல்லி காவல் ஆணையாளர் ராகேஷ் ஆஸ்தானா தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதுபற்றி அவர் கூறும்போது, உள்ளூர் குற்றவாளிகள், கும்பல்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களின் உதவியின்றி அவர்களால் தாக்குதல் நடத்த முடியாது என கூறியுள்ளார்.
ரசாயன பொருள் விற்பனை கடை, வாகன நிறுத்தங்கள், பழைய பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கார் டீலர்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படுவதுடன், கண்காணிக்கப்படவும் கூடும். பெட்ரோல் பம்புகள் உள்ளிட்டவை தாக்குதலுக்கான இலக்காக கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது.
இதனால், வாடகைக்கு இருப்போர், பணியாளர்களை சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.