தேசிய செய்திகள்

மும்பை தாக்குதல் சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்- மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்படி தாக்குதலின் சதிகாரர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பயங்கரவாதம் மனித குலத்தை அச்சுறுத்துகிறது. இன்று, மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதில் உலகமே இந்தியாவுடன் இணைந்து கொள்கிறது. இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு, மேற்பார்வையிட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் இழப்பை நினைவுகூர்வதும், தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான எங்கள் முயற்சிகளில் விடாமுயற்சியுடன் இருப்பதும் சர்வதேச சமூகத்தின் பொறுப்புள்ள உறுப்பினர்களாகிய ஒவ்வொருவரின் கடமை எனவும் ஜெய்சங்கர் அதில் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு