தேசிய செய்திகள்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கார்டோசாட் 3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைகோள்களுடன் இன்று காலை பி.எஸ்.எல்.வி சி -47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 509 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் கார்டோசாட்-3 நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் நானோ செயற்கைக் கோள்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டன.

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பின்னர் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டை மீண்டும் ஒருமுறை பெருமை அடைய செய்துள்ளனர் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு