கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

முந்தைய அரசின் திட்டங்களுக்கு மறு பெயர் சூட்டுவதில் மோடி நிபுணர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

முந்தைய அரசின் திட்டங்களுக்கு மறு பெயர் சூட்டுவதில் பிரதமர் மோடி ஒரு நிபுணர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின் ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டு நேற்று 7-வது ஆண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, இந்த திட்டத்தின் பயன்பாட்டை பிரதமர் மோடி பாராட்டி இருந்தார். இந்த நிலையில் ஜன்தன் திட்டம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வங்கி சேமிப்பு திட்டத்தின் மறுபெயர்தான் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் தளத்தில், ஜன்தன் திட்டத்தின் 7-வது ஆண்டு நிறைவை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். உண்மையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அடிப்படை வங்கி சேமிப்பு திட்டத்துக்கு மறுபெயர் சூட்டியதன் 7-வது ஆண்டு நிறைவுதான் இது என்று குறிப்பிட்டு உள்ளார்.

மறுபெயரிடுதல், மறு அறிவித்தல் மற்றும் மீண்டும் தொடங்குவதில் பிரதமர் மோடி என்னே ஒரு நிபுணர் எனவும் அவர் வியப்பை தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்