தேசிய செய்திகள்

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்; ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் பிரதமர் மோடியை 2017ம் ஆண்டுக்கான இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகள் இன்று சந்தித்து உரையாடினர்.

இந்த சந்திப்பில், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது, பல்வேறு பொறுப்புகள் மற்றும் பணிகளை தனித்துவமுடன் செயலாற்ற வேண்டியது ஆகியவற்றின் அவசியம் பற்றி பிரதமர் மோடி வலியுறுத்தி பேசினார்.

அவர், தங்களது பணியின்பொழுது உயிரிழந்த 33 ஆயிரம் காவல் துறை அதிகாரிகளின் தியாகத்தினையும் நினைவு கூர்ந்து பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த சந்திப்பில், நல்ல நிர்வாகம், ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை, பெண்களுக்கான அதிகாரம் கிடைக்க பெறுதல் மற்றும் தடய அறிவியல் ஆகியவையும் ஆலோசிக்கப்பட்டன என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.