புதுடெல்லி,
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுடன் இந்தியாவும் கலந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து போட்டியாளர்களையும் வருகிற 15ந்தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டைக்கு சிறப்பு விருந்தினர்களாக வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விட இருக்கிறார்.
அந்த நேரத்தில் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் பிரதமர் மோடி, அனைவருடனும் உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.