தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளியை அவர் காஷ்மீரில் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் கொண்டாடுகிறார்.

இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மோடி வருவதாக பாதுகாப்பு துறையின் மேலிட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது, 2014-ம் ஆண்டில் இருந்து காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் மோடி கொண்டாடும் 4-வது தீபாவளி ஆகும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை தொடர்ந்து, 2019-ம் ஆண்டு அவர் ரஜவுரி எல்லை பகுதியில் படையினருடன் தீபாவளி கொண்டாடினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து