தேசிய செய்திகள்

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் 761 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், உங்களுக்கு மக்கள் பணியில் உற்சாகமும், திருப்தியும் அளிக்கும் வாழ்க்கை காத்திருக்கிறது. இந்தியாவின் பயணத்தின் முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் குறிப்பிடத்தக்க நிர்வாகப் பங்கை ஆற்றப்போகிறீர்கள்.

அதேநேரம், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறாத இளம் நண்பர்களுக்கும் நான் ஒன்று கூற விரும்புகிறேன். நீங்கள் அறிவுத்திறன் மிக்கவர்கள். இன்னும் பல முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். அதேவேளையில், நாட்டில் வேறு பல வாய்ப்புகளும் நிறைந்திருக்கின்றன. நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்