புதுடெல்லி,
வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் உடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இன்று காலை 11.15- மணிக்கு இரு தலைவர்களும் உரையாடினார். கடந்த ஏப்ரல் மாதம் வியட்நாம் பிரதமராக பாம் மின் சின் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவருடன் முதல் முறையாக பிரதமர் மோடி பேசினார்.
இதனால், பிரதமராக தேர்வானதற்காக பாம் மின் சின்னிற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இந்த உரையாடலின் போது கொரோனா நெருக்கடி, தடுப்பூசி, இந்தோ பசுபிக் விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.