புதுடெல்லி,
இந்தியாவும் பூடானும் தூதரக ரீதியான நட்புறவு கொண்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜுலை 5-ம் தேதி முதல் 3 நாள் சுற்றுப்பயணமாக பூடான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே இந்தியா வருகை தந்துள்ளார்.
இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் டோப்கேவை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு, இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பூடான் பிரதமரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார்.
மோடி- டோப்கே ஆகியோரின் பேச்சுவார்த்தையின் போது, கடந்த ஆண்டு 73 நாட்கள் இந்தியா -சீனா ராணுவம் இடையே டோக்லாம் முச்சந்தி பகுதியில் பிரச்சினை நிலவிய விவகாரம் பற்றியும் இருவரும் ஆலோசித்து இருக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.