புதுடெல்லி,
புதுடெல்லியில் ஆசியன் மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்தியா வந்துள்ள தாய்லாந்து நாட்டு பிரதமர் பிரயூத் சானை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் இரு நாட்டு ஒத்துழைப்பினை வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆகிய முக்கிய துறைகளை பற்றி இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
ஆசியன் குழுவின் தலைவராக உள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் உடனும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு பற்றி வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி ரவீஷ் குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நம்முடைய கிழக்கு ஆசிய கொள்கையானது தாய்லாந்தின் மேற்கு ஆசிய கொள்கையை வரவேற்கிறது. பிரதமர் மோடி தாய்லாந்து பிரதமரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில், பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றங்கள் பற்றிய ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, கலாசார ஒத்துழைப்பு ஆகியவை பற்றியும் பேசப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
#delhi #PM #Modi