தேசிய செய்திகள்

ரூ.11,000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சயினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதன்படி துவாரகா விரைவுச்சாலையின் டெல்லி பிரிவு மற்றும் நகர்ப்புற விரிவாக்க சாலை-II (UER-II) திட்டம், அலிபூர்-திச்சான் கலான் நகர்ப்புற விரிவாக்க சாலை-II (UER-II) திட்டம், மற்றும் ரூ.5,580 கோடி மதிப்பிலான பகதூர்கர், சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன் கூடிய திட்டங்கள் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்