தேசிய செய்திகள்

பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி? மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி? என்ற நிகழ்ச்சியில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நடப்பு கல்வியாண்டில் தேர்வுக்கு தயாராகக் கூடிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'பரீக்ஷா பே சர்ச்சா 2020' என்ற பெயரிலான நிகழ்ச்சி புதுடெல்லியில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி மாணவர்களிடையே பேசும்பொழுது, ஒரு பிரதமராக, பல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு புதிய அனுபவத்தினை எனக்கு வழங்கியது.

ஆனால், உங்கள் மனதை தொட்ட நிகழ்ச்சி எது என்று யாரேனும் என்னிடம் கேட்டால், இந்த நிகழ்ச்சியே என்று நான் கூறுவேன்.

இந்திய இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஹேக்கத்தான்கள் செயல்படுகின்றனர். அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார்.

கிராபிக் டிசைனர்ஸ், திட்ட மேலாளர்கள் உள்ளிட்ட கணினியில் புதிய வகை மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபடும் நபர்கள் ஹேக்கத்தான்கள் எனப்படுகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்