புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் மீன்வளத் துறையின் கவனம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முதன்மை திட்டமான மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தை இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
2020 முதல் 5 ஆண்டு காலத்திற்கு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் விவசாயிகள் நேரடியாகப் பயன்படுத்துவதற்கான விரிவான இன மேம்பாட்டு சந்தை மற்றும் கால்நடை பராமரிப்பை ஊக்குவிக்கும் வகையில் இ-கோபாலா செயலியையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மீன் உற்பத்தியில் ஈடுபடும் மக்கள் இந்த திட்டத்தால் பெருமளவில் பயனடைவார்கள். அடுத்த 3-4 ஆண்டுகளில் எங்கள் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, மீன்வளத் துறைக்கு ஊக்கமளிப்பதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்தார்.