தேசிய செய்திகள்

எடியூரப்பாவை வைத்துக்கொண்டு ஊழல் பற்றி பேசலாமா? பிரதமர் மோடிக்கு சித்தராமையா பதிலடி

என்னுடைய அரசு ஊழல் அரசு என கூறும் பிரதமர் மோடி அதனை நிரூபிக்க வேண்டும் என சித்தராமையா கூறிஉள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க பா.ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

நேற்று பெங்களூருவில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் வாசலில் நிற்கிறது. அங்கிருந்து முழுமையாக வெளியே செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. சிலர் நாட்டின் நலனை விட சொந்த நலனுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாங்கள் அவ்வாறு இல்லை. நாங்கள் நாட்டு நலனுக்கே பாடுபடுகிறோம். ஊழல் செய்வதில் கர்நாடக காங்கிரஸ் அரசு புதிய சாதனை படைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் இப்பேச்சுக்கு எடியூரப்பாவை முதல்-மந்திரியாக அறிவித்த அவர் பொதுக்கூட்டத்தில் அப்படியெல்லாம் பேசியிருக்க கூடாது என பதிலடி கொடுத்து உள்ள சித்தராமையா, என்னுடைய அரசு ஊழல் அரசு என கூறும் பிரதமர் மோடி அதனை நிரூபிக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். எடியூரப்பாவை அருகே வைத்துக்கொண்டு ஊழல் பற்றி பிரதமர் மோடி பேசலாமா? பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போது லோக்அயுக்தாவை கூட நியமனம் செய்யவில்லை. பிரதமரானது, எடியூரப்பாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிறுத்திவிட்டார், இதைவிட வேறு அவமானம் கிடையாது என்று கூறிஉள்ளார் சித்தராமையா.

ஊழல் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு தொடர்பாக சித்தராமையா பேசுகையில் பிரதமரின் அறிக்கையானது பொறுப்பற்றது. அவருடைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை கொடுக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை. அவருடைய பேச்சு எல்லாம் பொய்தான்,என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்